விரிந்துசெல்லும் என் கனவு

கலியுகன்
.......................................................
வெட்டைவெளியாய்
விரிந்து செல்கிறது என்கனவு
எம் விடியலுக்கான அத்தியாயங்களைத்தேடி
பரந்த வெளியெங்கும் சிதறிக்கிடக்கிறது

குருதிதோய்ந்த மனித உடலங்கள்
மனைகளும் மாடங்களும் கூட
இடிந்தும் நொருங்கியுமாய்க்கிடக்கிறது

என் கனவு நீழ்கிறது

யார்யாரோ வந்துபார்த்து ஏதேதோ
கதைத்துவிட்டுச் செல்கிறார்கள்
எம்மைப்பற்றிய எதுவித பிரதிபலிப்புக்களுமில்லை

சிதைந்துபோய்க் கிடக்கிறது என்தேசம்
காகங்களும் பருந்துகளும் சிதறிய உடலங்களில்
தமக்காய் இரைதேடிச் செல்கிறது

என் கனவு மீண்டும் விரிகிறது
எம் விடியலுக்காய் புதிய அத்தியாயங்களைத்தேடி

கருத்துரையிடுக

emo-but-icon

நிலாவனம்

கலியுகனின்

கவிதைகள்
கட்டுரைகள்
பத்திகள்
சிறுகதைகள்
ஒளிப்படங்கள்

தொடர்புகளிற்கு

kaleyouha@gmail.com

Follow Us

Hot in week

Recent

  • கவிதையை யாசிக்கும் நெஞ்சங்களுக்காய் ............... !
  • Comments

    Side Ads

    Text Widget

    Contact Us

    பெயர்

    மின்னஞ்சல் *

    செய்தி *

    Random News

    கவிதைகளும் பிறவும்...

    Connect Us

    item